1.
கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே – எழுந்திராய்
2.
வறண்டு தண்ணீரற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை – நாடுவேன் – கதிரவன்
3.
கடவுளின் வல்லமை, கன மகிமை காணும்
இடமதில் செல்வதே – என்இடம் – கதிரவன்
4.
ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் – போற்றுவேன் – கதிரவன்
5.
ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய்ப் பாடி நான் – உயர்த்துவேன் – கதிரவன்
6.
மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களைச் சிந்திப்பேன் – கதிரவன்
7.
அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன் – கதிரவன்
8.
ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம் போல் என்னைக் காக்கிறார் – கதிரவன்
1.
kathiravan ezhukinra kalaiyil iraivanaith
thuthi seyya maname – ezhunththiray
2.
varandu dhanneeratrra vanam inthdhab buvidhanil
thiranta dhayai thevai – naduven – kathiravan
3.
kadavulin vallamai, kana makimai kanum
itamathil selvathe – enitam – kathiravan
4.
jeevanaib parkkilum thevanin kadhalai
aavalay nadi nan – beாrruven – kathiravan
5.
aayul pariyanthdham aandavar namaththai
neyamayb badi nan – uyarththuven – kathiravan
6.
meththaiyil rassamam niththirai kolkaiyil
karthdharin seyalkalais sinththibben – kathiravan
7.
allum pakalum nan avar seddaikalin keel
thollaikku neengkiye – othungkuven – kathiravan
8.
aaththumam thevanai andik kolla avar
neththiram pol ennaik kakkirar – kathiravan